உலகக் கவிதைகள் தினம்

குறுகுறுக்கும் கருவிழி நிறையும்
தன்னிழல் தின்ன முயன்று
அலகு வலி தாளாமல் மருண்டு
கலங்கி நிற்கிறது குருவி
நினைவோடை நெடுவழியே
உலக ஆடியில் தெறிக்கும்
தன் மாயபிம்பம் வெல்ல
திக்கற்று
இடருறும் மானிடப் பறவை

குருவிகள் தின இரவின் மடியில் புலரும் கவிதைகள் தின வாழ்த்துக்கள்(21.03.2017).

Comments

 1. நல்ல கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 2. புதிய டெம்ப்ளேட் அருமை அய்யா
  கவிதை மகிழ்வு

  ReplyDelete
 3. சின்ன ஆடியில் பெரிய உலகத்தைப் பார்த்துவிட்டீர்கள் அய்யா? அற்புத உவமை! (எ.கா.உ)
  அவ்வப்போது எழுதுங்கள் அய்யா! பேனா (சுண்டெலி) காய்ந்துவிடப் போகிறது அய்யா பெருமாள் முருகனின் நேர்காணல் குறித்தும் எழுதலாமே?
  புதிய வலைப்பக்க வடிவமைப்பு, தெளிவாக இருந்தாலும் பலவிவரங்களைத் தெரிந்துகொள்ளாத குறையிருப்பதாகப் படுகிறதே அய்யா!

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா.

  பிரமிளின் கவிதைகளை நினைவு படுத்துகிறது தங்களின் நடை.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 5. அருமை அய்யா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமயத்தில் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்கள்

நீலகேசி உரைநூல்

நட்ட கல்லும் பேசுமே…